திருப்பூர் கல்லாங்காடு பகுதியிலுள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக குடிமைப் பொருள் அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலர்கள், காவல் துறையினர் அப்பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரின் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.
வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்!
திருப்பூர்: கல்லாங்காடு பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளைப் பறிமுதல் செய்த உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவினர், கடத்தலில் ஈடுபட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
அப்போது அவரது வீட்டிலுள்ள அறையில் சுமார் 1,000 கிலோ அளவிலான ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளைப் பறிமுதல் செய்த உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவினர், தியாகராஜன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், தியாகராஜன் அப்பகுதியைச் சேர்ந்த மக்களிடமிருந்து ரேஷன் அரிசியை வாங்கி, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த வடமாநில தொழிலாளர்களுக்கு கிலோ 10 ரூபாய் என்று விற்பனை செய்துவந்தது தெரியவந்துள்ளது.