திருப்பூர் அனுப்பர்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் ஷியாம் என்பவர் கைப்பேசி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல நேற்றிரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்ற நிலையில், இன்று காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு விலை உயர்ந்த கைப்பேசிகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஷியாம் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைச் சோதனை செய்தார்.
செல்போன் கடை பூட்டை உடைத்து கொள்ளை! - thiruppur
திருப்பூர் : அனுப்பர்பாளையம் அருகே உள்ள செல்போன் கடையில் அடையாளம் தெரியாத மர்ம நபர் விலை உயர்ந்த செல்போன்களை திருடிச் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்போன் கடையில் திருட்டு
நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர் சிசிடிவி படக்கருவி இருப்பது தெரிந்ததும் ஹெல்மட்டை அணிந்து முகத்தை மறைத்துக்கொண்டார். இதன்பின்னர் கடையினுள் இருந்த விலை உயர்ந்த ஆறு கைப்பேசிகளை மட்டும் திருடிச் சென்றுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த வேலம்பாளையம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.