திருப்பூர் - அனுப்பர்பாளையம் பகுதியில் பனங்காட்டு படை கட்சியின் கொங்கு மண்டல பொறுப்பாளர் சதா நாடார் என்பவர் தனது பிறந்த நாளை கட்சி அலுவலகத்தில் கொண்டாடினார். விழாவிற்கு வந்திருந்த கட்சி நிர்வாகிகள் முகக்கவசம் அணியாமலும், தகுந்த இடைவெளியை கடைபிடிக்காமலும் விழாவில் கலந்துகொண்டனர்.
அரிவாளால் கேக்வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள்
திருப்பூர் : கட்சி நிர்வாகி ஒருவர் அரிவாளால் கேக்வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய காணொலி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
திருப்பூர் பிறந்த நாள் கொண்டாட்டம்
மேலும், பிறந்த நாள் கொண்டாடிய சதா நாடார், அரிவாளால் கேக்வெட்டி அவரது பிறந்த நாளை கொண்டாடினர். அப்போது எடுக்கப்பட்ட காணொலி, சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.
இதையும் படிங்க:ஊழியர்களை விரட்டி விரட்டி அரிவாளால் வெட்டும் மனநலம் பாதிக்கப்பட்டவர் - வைரல் வீடியோ