திருப்பூர் காங்கேயம் சாலை பொன்னம்மாள் லே-அவுட் பகுதியில் வசித்து வருபவர் ரியல் எஸ்டேட் இடைத்தரகராக பணிபுரியும் நடராஜ். இவர் கடந்த புதன்கிழமை அன்று தனது மனைவி கண்ணம்மாள் மற்றும் மகள் தியாவுடன் கும்பகோணத்தில் உள்ள திருவிடைமருதூர் கோயிலுக்குச் சென்றுள்ளார்.
அங்கு சாமி தரிசனம் முடிந்த நிலையில் நேற்று இரவு தங்கள் வீட்டிற்கு திரும்பி உள்ளனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த நடராஜன், உள்ளே சென்று பார்த்தபோது வீட்டினுள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு 47 சவரன் நகை மற்றும் 81 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.