திருப்பூர்:கரோனா தொற்று காரணமாக தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு திரையரங்குகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டன. இதனிடையே கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 50 விழுக்காடு இருக்கைகளுடன் திரையரங்குகளைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியிருந்தது.
இதனிடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு நடிகர் விஜய் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து திரையரங்கில் 100 விழுக்காடு இருக்கைகளுக்கு அனுமதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, இன்று தமிழ்நாட்டில் 100 விழுக்காடு பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சக்தி சுப்பிரமணியம் நமது ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "திரையரங்கு உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு 100 விழுக்காடு இருக்கைகளுடன் திரையரங்குகளைத் திறக்க அனுமதி வழங்கியுள்ள முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.