திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் பல்லடம் நான்கு வழிச்சாலை பகுதியில் உள்ள சிக்னல் கம்பத்தின் மீது வடமாநில இளைஞர் ஒருவர் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் அவ்வழியே சென்ற கனரக லாரி ஒன்றை நிறுத்தி அதன் உதவியுடன் அந்த இளைஞரை கீழே இறக்க முயற்சி செய்தனர். அதற்குள் தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்து அந்த நபரை மீட்டனர்.
அதனைத் தொடர்ந்து பல்லடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், " தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் பிகாரைச் சேர்ந்த காகேஸ்வர் பெகரா என்பவர் என்றும், கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவில் காரணம்பேட்டை பகுதியில் அவரது செல்போன், ஓட்டுனர் உரிமங்களை அடையாளம் தெரியாத நபர் வழிப்பறி செய்து அவரைத் தாக்கியதும் தெரியவந்தது.