திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம், அதன் தலைவர் செல்லமுத்து தலைமையில் நேற்று (ஜூன் 6) நடைபெற்றது. செயற்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த செல்லமுத்து, "ஊரடங்கு காலத்தில் மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வருகிறது. அதனை உழவர் உழைப்பாளர் கட்சி வன்மையாக கண்டிப்பதோடு விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை தடை செய்யும் சட்ட மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறது.
'இலவச மின்சார ரத்தை திரும்பப் பெறாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்' - free electricity issues
திருப்பூர்: இலவச மின்சார ரத்து சட்ட மசோதாவை திரும்பப் பெறாவிட்டால் மத்திய அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என உழவர் உழைப்பாளர் கட்சி மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உழவர் உழைப்பாளர் கட்சி
அவ்வாறு அதனை திரும்பப் பெறாவிட்டால் மத்திய அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். விளைபொருள்களுக்கு விலை உயர்த்தி தருவதாகக் கூறி பைசா கணக்கில் ஏற்றுவது விவசாயிகளை ஏமாற்றும் செயல், எனவே உடனடியாக உரிய விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.