கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவிவருவதாக வெளியான தகவல் அம்மாநிலம் மட்டுமின்றி, தமிழக எல்லைப் பகுதிகளிலும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, நிபா வைரஸ் நோயால் ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டார் என்றும், இதில் பதற்றமடைய எதுவுமில்லை எனவும் கேரள சுகாதாரத்துறை விளக்கம் அளித்திருந்தது.
இந்நிலையில், நிபா வைரஸ் தமிழ்நாட்டிற்குள் பரவுவதை தடுப்பதற்காகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உடுமலை வழியாக கேரளாவில் இருந்து வரும் மக்களை சோதிக்க சுகாதாரத் துறை சார்பாக முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
கேரள எல்லையில் நிபா வைரஸ் விழிப்புணர்வு முகாம் கடந்த ஒருவார காலமாக செயல்பட்டு வரும் இரண்டு முகாம்களிலும் இதுவரை நிபா வைரஸ் தாக்கிய எவரும் தமிழ்நாட்டிற்குள் அந்த வழியாக வரவில்லை என்று கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் அங்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களிடத்தில் மருத்துவரை பார்க்க அறிவுறுத்துவதாகவும் கூறுகின்றனர்.