தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதிப்பெண் குறைவால் மாணவன் தற்கொலை - தற்கொலை

திருப்பூர்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்ததால், மனமுடைந்த மாணவன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

file pic

By

Published : Apr 30, 2019, 2:44 PM IST

திருப்பூர் இடுவம்பாளையம் பெருமாள் கோவில் வீதி பின்புறம் வசித்துவருபவர் ரவிச்சந்திரன். இவரது மகன் சிவசுப்பிரமணியம். இவர் அருகிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று (ஏப்.29) தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் அந்த மாணவன் 247 மதிப்பெண் மட்டுமே பெற்றுள்ளார். இவருடன் படித்த மற்ற மாணவர்கள் அதிகமான மதிப்பெண் பெற்றிருந்தனர்.

இதனால் மனமுடைந்த சிவசுப்பிரமணியம் நேற்று (ஏப்.29) இரவு மாணவன் திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக வீரபாண்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details