கோவையில் இருந்து மதுரை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்தப் பேருந்து திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து பள்ளப்பட்டியிலிருந்து திருப்பூர் நோக்கி வந்துகொண்டிருந்த கார் மீது பயங்கரமாக மோதியது.
அரசுப் பேருந்து, கார் மோதல்: மூன்றுபேர் பலி
திருப்பூர்: தாராபுரம் அருகே அரசுப் பேருந்தும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் மூன்று பேர் பலியாகியுள்ளனர்.
இதில் காரில் பயணம் செய்த சுரேஷ் பாண்டி, சிரிவளன், சிவனேசன் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் காயமடைந்தவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.