தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீபாவளிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்? - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம்! - diwali special buses in tamilnadu

திருப்பூர்: தீபாவளிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனவும்; அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

By

Published : Oct 18, 2020, 3:18 PM IST

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் உள்ள தனியார் ஹோட்டல் திறப்பு விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

அதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'கரோனா காரணமாக முடக்கப்பட்டிருந்த பேருந்து சேவைகள் தற்போது படிப்படியாகத் தொடங்கப்பட்டு வருகின்றன.

அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

அதன்படி 70 விழுக்காடு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மதியவேளையில் மட்டும் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை" எனத் தெரிவித்தார்.

அதையடுத்து அவர், "தீபாவளிக்கு சிறப்புப்பேருந்துகள் இயக்குவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஆலந்தூரில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details