மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூரில் மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - வேளாண் சட்டத் திருத்த மசோதா
திருப்பூர்: விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் மத்திய தபால் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Agriculture act 2020
விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக உள்ள மத்திய தபால் நிலையத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராகவும், வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.