தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாடு அரசுக்கு நன்றி கூறி போராட்டத்தை கைவிடுவோம்’ - ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் அமைப்பின் தலைவர் அல்தாபி

திருப்பூர்: தலைமைச் செயலகத்தில் நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாடு அரசுக்கு நன்றி கூறி போராட்டத்தை கைவிடுவோம் என ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் அமைப்பின் தலைவர் அல்தாபி தெரிவித்தார்.

கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாடு அரசுக்கு நன்றி கூறி போராட்டத்தை கைவிடுவோம்
கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாடு அரசுக்கு நன்றி கூறி போராட்டத்தை கைவிடுவோம்

By

Published : Mar 13, 2020, 11:37 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் அருகே சாலையில் 28ஆவது நாளாக நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் அமைப்பின் தலைவர் அல்தாபி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மக்கள் தொகை கணக்கெடுப்பை பழைய நடைமுறையோடு அமல்படுத்த வேண்டும். என்பிஆர் முறையில் அமல்படுத்தக் கூடாது.

அமைச்சர் உதயகுமார், என்பிஆரை நடைமுறைப்படுத்த மாட்டோம் என தெரிவித்திருந்தால் போராட்டத்தை கைவிட்டிருப்போம். ஆனால் நிறுத்தி வைத்திருப்பதாக தெரிவித்திருப்பது வருத்தமளிக்கிறது. நாளை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் அனைத்து இஸ்லாமிய தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில், எங்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றினால் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்தார்.

கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாடு அரசுக்கு நன்றி கூறி போராட்டத்தை கைவிடுவோம்

ABOUT THE AUTHOR

...view details