தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிஏஏவுக்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் போராட்டம்! - சிஏஏ-வுக்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் போராட்டம்

திருப்பூர்: குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய பெண்கள் கலந்துகொண்ட பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

sdpi protest in Tiruppur
sdpi protest in Tiruppur

By

Published : Feb 13, 2020, 2:29 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. அப்போது முதல் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் அதற்கு எதிராக தொடர்ந்து போராடிவருகின்றனர்.

இந்நிலையில் திருப்பூரில் எஸ்டிபிஐ கட்சியின் வுமன்ஸ் இந்தியா மூவ்மென்ட் மற்றும் நேஷனல் வுமன்ஸ் பிரண்ட் அமைப்பு சார்பில் இஸ்லாமிய பெண்கள் கலந்துகொண்ட பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணி காங்கேயம் சாலை வேலன் ஹோட்டல் அருகில் தொடங்கி, சிடிசி டிப்போவில் நிறைவடைந்தது.

சிஏஏ-வுக்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் போராட்டம்

பேரணியின் முடிவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறக்கோரி அவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: வனவிலங்குகள் கணக்கெடுப்புப் பணி தீவிரம்

ABOUT THE AUTHOR

...view details