திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த செம்மிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது இளைய மகன் சஞ்சீவ்(13), அருகில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில், வழக்கம் போல் செவ்வாய்க்கிழமை பள்ளிக்கு சென்ற மாணவன் பள்ளி நேரத்தில் படிக்கமால் புத்தகத்தில் வரைந்து கொண்டிருந்தார். இதை கண்ட ஆசிரியை, அந்த மாணவனை கண்டித்து பள்ளி மைதானத்தில் சக மாணவர்கள் முன்னிலையில் முட்டி போட வைத்துள்ளார். மேலும் தலைமை ஆசிரியர் அறைக்கு அழைத்துச் சென்று மன்னிப்புக் கடிதமும் எழுதி வாங்கியுள்ளார்.
ஆசிரியை முட்டி போட வைத்ததால் மாணவன் தற்கொலை! - தனியார் பள்ளி
திருப்பூர்: பல்லடம் தனியார் பள்ளியில் சக மாணவர்கள் முன் ஆசிரியை திட்டி, முட்டி போட வைத்ததால் மனமுடைந்த 8ஆம் வகுப்பு மாணவன் சஞ்சீவ், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் மனமுடைந்த சஞ்சீவ், பள்ளி முடிந்து மாலை வீட்டுக்கு சென்றதும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர், இரவு வேலை முடிந்து பெற்றோர் வீட்டுக்கு வந்த போது, மாணவன் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், மாணவனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சக மாணவர்கள், பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.