தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமராவதி ஆற்றில் மணல் கடத்தியவர் கைது: 2 வாகனங்கள் பறிமுதல் - sand smuggling in tiruppur

திருப்பூர்: அமராவதி ஆற்றில் மணல் கடத்திய நபரைக் கைதுசெய்த காவல் துறையினர், அவரிடமிருந்த இரண்டு வாகனங்களைப் பறிமுதல்செய்தனர்.

amaravati sand smuggling
amaravati sand smuggling

By

Published : Jan 5, 2021, 2:46 PM IST

திருப்பூர் மாவட்டம் வேளாம்பூண்டி அமராவதி ஆற்றில் திண்டுக்கல் மாவட்டம் பேருச்சிபாளையத்தைச் சேர்ந்த ஜெகநாதன் (32) என்பவர் மணல் கடத்தினார்.

அப்போது காவல் துறையினர், வருவாய்த் துறை அலுவலர்கள் சுற்றிவளைத்துப் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கரூர் மாவட்டத்திற்கு கடத்தல் மணலை விற்பனை செய்வதற்காக கொண்டுசெல்வதாகத் தெரிவித்தார்.

பின்னர் அவர் கைதுசெய்யப்பட்டு அவரின் டாட்டா ஏஸ் வாகனமும், இருசக்கர வாகனமும் பறிமுதல்செய்யப்பட்டன. மூலனூர் காவல் ஆய்வாளர் திருவானந்தம் மூலனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:மதுக்கடை ஊழியர்களை தாக்கி பணம் கொள்ளை: மூவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details