தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அரசு மருத்துவமனையில் தனி அறை வேண்டும்' - அடம்பிடிக்கும் ரவுடி பேபி சூர்யா! - அடம்பிடிக்கும் ரவுடி பேபி சூர்யா

திருப்பூர்: தனக்கு அரசு மருத்துவமனையில் தனி அறை வேண்டும் என டிக்டாக் புகழ் ரவுடி பேபி அடம்பிடித்துள்ளார்.

Tiktok Rowdy Baby Surya demand separate room in Govt hospital
Tiktok Rowdy Baby Surya demand separate room in Govt hospital

By

Published : Jun 17, 2020, 7:41 AM IST

டிக்டாக் மூலம் தமிழ்நாடு முழுவதும் பிரபலமானவர் சூர்யா. இவரது எல்லை மீறிய சேட்டைகளால் ரௌடி பேபி சூர்யா என அழைக்கப்பட்டார். இவர் டிக்டாக் காணொலிகளில் ஆடை குறைப்பில் ஈடுபடுகிறார் என விமர்சனம் எழுந்தபோது பலரும் இவருக்கு அறிவுரை கூறினர். அவர்களிடம் தனது கடனை அடைக்க ஐந்து லட்சம் கொடுத்துவிட்டு அறிவுரை கூறுமாறு சொல்லி அதிர்ச்சி அளித்தவர்.

திருப்பூர் செட்டிப்பாளையம் அருகே உள்ள அய்யம்பாளையம் நால்ரோடு சபரிநகரைச் சேர்ந்த சூர்யா கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூர் சென்றுள்ளார். கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று பரவல் காரணமாக விமான போக்குவரத்து இன்றி அங்கேயே சிக்கினார்.

தற்போது சிறப்பு விமான சேவைகள் தொடங்கியுள்ளதால் அதன்மூலம் தமிழ்நாடு திரும்பிய இவர், திருப்பூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் கரோனா பீதியால் காவல் துறையினருக்கும் சுகாதாரத் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த காவல் துறையினர் இது குறித்து ரவுடி பேபி சூர்யாவிடம் விசாரித்துள்ளனர்.

அப்போது தனக்கு அரசு மருத்துவமனையில் தனி அறை உணவுடன் வேண்டும். அப்படி இல்லையென்றால் பிரச்னை செய்வேன் என அலப்பறை செய்துள்ளார்.

இதையும் படிங்க...'ஒன்னு இந்தாயிருக்கு இன்னொன்னு எங்க'... 31 ஆண்டுகளைக் கடந்த 'கரகாட்டக்காரன்'

ABOUT THE AUTHOR

...view details