திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த கண்ணமநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார்(25). இவர் பொள்ளாச்சி சாலையில் ஜாஹிர் உசேன் என்பவர் புதியதாக கட்டிவரும் கடைக்கு கான்ரிக்ட் போடுவதற்காக வேலைக்கு சென்றுள்ளார். வழக்கம் போல் கட்டிட தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது மாடிக்கு கலவை கொண்டு செல்ல பயன்படுத்திய வாளியை செல்வகுமார் தொட்டுள்ளார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்தில் செல்வகுமார் பரிதாபமாக உயிரழந்தார்.
மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி...
திருப்பூர்: மின்சாரம் தாக்கி கட்டட தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் திருப்பூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, கட்டட உரிமையாளர், பொறியாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இருப்பினும் இருவரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, கட்டட வேலைகள் நடைப்பெற்றுகொண்டு இருந்த தருவாயில் மின்சார ஒயர்களை முறையாக பராமரிக்கமால் அலட்சியமாக விட்டதால்தான் உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே கட்டட உரிமையாளர், பொறியாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செல்வகுமாரின் உறவினர்கள் கோவை திண்டுக்கல் சாலையில் தீடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து, தகவலறிந்து வந்த காவலதுறையினர் உரிய நடவடிக்கை எடுக்கபடும் என உறுதியளித்த பின் உறவினர்கள் மறியலை கைவிட்டனர். பின்னர், செல்வகுமாரின் உடல் அரசு மருத்துவணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.