திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் மொத்த மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கிருந்து சில்லறை வியாபாரிகள் மீன்களை பெற்றுக் கொண்டு ஒவ்வொரு பகுதியிலும் வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மொத்த விற்பனை செய்யும் வியாபாரிகளும் சில்லறை வியாபாரம் செய்வதால், சில்லறை விற்பனை செய்யும் வியாபாரிகள் பாதிக்கப்படுள்ளனர். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மீன் வியாபாரிகள் நல சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றினை அளித்தனர்.