தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெறிநாய் கடியால் 15 ஆடுகள் பலி! - தாராபுரத்தில் வெறிநாய் கடித்து ஆடுகள் பலி

திருப்பூர்: தாராபுரத்தில் வெறிநாய் கடித்து விவசாயியின் 15 ஆடுகள் உயிரிழந்ததையடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Rabid dog bites more than fifteen goats
Rabid dog bites more than fifteen goats

By

Published : Nov 22, 2020, 8:07 PM IST

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குமாரபாளையம் மணியக்காரர் தோட்டத்தில் வசித்துவருபவர் விவசாயி பழனிச்சாமி (60). இவர் தனது வாழ்வாதாரத்துக்காக கடந்த 15 ஆண்டுகளாக தனது தோட்டத்தின் பட்டியில் 30 ஆடுகளை வளர்த்துவருகிறார்.

நேற்று (நவ. 22) மாலை மேய்ச்சலுக்குச் சென்ற ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு அருகில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பினார். மீண்டும் இன்று அதிகாலை பட்டியில் இருந்த ஆடுகளை அவிழ்த்து விடுவதற்காக சென்று பார்த்தபொழுது அங்கு வெறிநாய் கடித்து 15 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தன.

சில ஆடுகளுக்கு காயம் ஏற்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயி உடனடியாக குண்டடம் காவல்துறையினர், கால்நடைத்துறை மருத்துவர், வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வருவாய், காவல்துறை அலுவலர்கள் சம்பவம் குறித்து கேட்டறிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க... உயிர்கொல்லும் வெறி நாய் கடியிலிருந்து மீட்க நடவடிக்கை எடுங்கள்!

ABOUT THE AUTHOR

...view details