இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் பரவலைத் தவிர்க்கும் வகையில், கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், ஊரடங்கு காலத்தால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என்றும்;
ஊரடங்கு கால நிவாரண நிதி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் - கரோனா கால நிவாரணம்
திருப்பூர்: கரோனா ஊரடங்கு கால நிவாரண நிதியை பாதிக்கப்பட்டவர்களுக்கு முறைப்படுத்தி வழங்கக்கோரி, சிஐடியு தொழிற்சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊரடங்கு கால நிவாரண நிதி வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
ஆறு மாத காலத்திற்கு ரேஷன் கடைகளில் இலவசப் பொருட்கள் விநியோகம் செய்ய வேண்டும் உள்ளிட்டப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் அரிசி கடை வீதியில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.