திருப்பூர் மாவட்டத்தில், எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டத்தினை முறையாக அமல்படுத்த வேண்டும் எனவும், அவினாசி திருமலைக் கவுண்டம்பாளையத்தில் தீண்டாமை கொடுமையால் பாதிக்கப்பட்ட சத்துணவு சமையலர் பாப்பம்மாள் வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர், திருப்பூர் மாநகராட்சி எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வன்கொடுமை தடுப்பு சட்டத்தை முறையாக அமல்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் - வன்கொடுமைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பூர்: வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை முறையாக அமல்படுத்தக் கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
tpr
இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பல்வேறு கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், பெரியார் இயக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகளும் கலந்துகொண்டனர்.