தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தடியடி நடத்திவிட்டு இஸ்லாமியர்கள் மீதே அரசு பழிபோடுகிறது' - ராமகிருட்டிணன் - Attack on Islamists who have fought the Citizenship Amendment Act

திருப்பூர்: சென்னை வண்ணாரப்பேட்டையில் போராடிய இஸ்லாமியர்கள் மீது திட்டமிட்டு தடியடி நடத்திவிட்டு, தற்போது அவர்கள் மீதே அரசு பழிபோடுவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ராமகிருட்டிணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

caa
caa

By

Published : Feb 18, 2020, 12:21 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடிய இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் அறிவொளி நகர் பகுதியில் மூன்றாவது நாளாக குடியுரிமை பாதுகாப்பு இளைஞர் கூட்டமைப்பினர் போராடி வருகின்றனர். இந்த அமைப்பினரைச் சந்தித்த பின் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் ராமகிருட்டிணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ’ இந்தியாவில் ஒன்பது மாநிலங்கள் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை அமல்படுத்த மாட்டோம் எனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், பாஜகவிற்கு அடிமையாக உள்ள தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றத் தயங்கிவருகிறது.

தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ராமகிருட்டிணன் செய்தியாளர்கள் சந்திப்பு

எனவே தீர்மானம் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும். மேலும் வண்ணாரப்பேட்டையில் தமிழ்நாடு அரசு, திட்டமிட்டுதான் தடியடி நடத்தி கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்தது. ஆனால், தற்போது இஸ்லாமியர்கள் மீது அரசு பழி சுமத்துகிறது’ என்றார்.

இதையும் படிங்க:‘ஸ்டாலின் மன்னிப்பு கேட்கச் சொன்னார்’ - ஆர்.எஸ். பாரதி

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details