தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆணவப்படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்! - திருப்பூர்

திருப்பூர்: தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் ஆணவப் படுகொலை, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையைல ஆகியவற்றை கண்டித்து சமத்துவம் அம்பேத்கர் மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆணவப்படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

By

Published : Aug 1, 2019, 5:10 AM IST

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் சமத்துவம் அம்பேத்கர் மக்கள் கட்சி சார்பில் ஜாதி ஆணவப் படுகொலைகளைக் கண்டித்தும், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆணவப்படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

இந்த ஆர்ப்பாட்டம் சமத்துவம் அம்பேத்கர் மக்கள் கட்சி நிறுவனர் தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது. அப்போது, சாதிய படுகொலைக்கு எதிராக தனி சிறப்பு சட்டம் இயற்றிட வேண்டும், தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் ஆணவப் படுகொலைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், சாதி மறுப்பு திருமணம் புரிந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும், சாதி மறுப்பு திருமணம் புரிந்தோருக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details