தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 18, 2019, 3:29 PM IST

ETV Bharat / state

'திருப்பூரில் சூரிய கிரகணத்தை 25 ஆயிரம் பேர் பார்க்கக்கூடிய வசதி' - தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

திருப்பூர்: வருகின்ற 26ஆம் தேதி  சூரிய கிரகணத்தை திருப்பூரில் 25 ஆயிரம் பேர் பார்க்கக்கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

press meet on solar eclipse
press meet on solar eclipse

வருகின்ற 26ஆம் தேதி காலையில் சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. காலை 8 மணி முதல் 11 மணி வரை நடைபெற உள்ள இந்த சூரிய கிரகணம் இந்த முறை திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் தெளிவாகத் தெரியும் என அறிவியல் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர், ’சுமார் 350 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பகுதிகளில் பெரிய சூரிய கிரகணத்தைக் காணும் வகையில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் சுமார் 25 ஆயிரம் பிரத்யேக கண்ணாடிகள் தயார் செய்யப்பட்டு திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் பொதுமக்களுக்கும் இது வழங்கப்பட்டுள்ளதாகவும்’ தெரிவித்தனர்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் செய்தியாளர் சந்திப்பு

மேலும்,’ இந்த சூரிய கிரகணத்தால் யாருக்கும் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாது எனவும், அதே போல் வெறும் கண்ணால் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். காலை 8 மணிக்குத் தொடங்கி 11 மணி வரை சூரிய கிரகணம் ஏற்பட்டாலும் கூட, சரியாக 9.20 மணியளவில் இரண்டு நிமிடங்கள் வரை முழுமையான வளைய சூரிய கிரகணத்தைக் காண முடியும்’ எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:

சீர்காழியில் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details