நேற்று மாலையில் இருந்து சமூகவலைதளத்தில் 'ப்ரே ஃபார் நேசமணி' எனும் ஹேஷ்டேக் ட்ரண்டாகி வருகிறது. இதில் பலரும் பலதரப்பட்ட மீம்களை ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். 19 வருடம் கழித்து ஒரு படத்தின் நகைச்சுவை ஒரு நாள் இரவில் பிரபலமாகிவிட்டது என்று அனைவரும் வியக்கின்றனர்.
திருப்பூர் பனியனிலும் ட்ரெண்டிங் ஆகும் 'ப்ரே ஃபார் நேசமணி'! - வடிவேலு
திருப்பூர்: இணையத்தைத் தொடர்ந்து திருப்பூர் பனியனிலும் 'ப்ரே ஃபார் நேசமணி' ஹேஸ்டேக் ட்ரெண்டாகியுள்ளது.
இந்நிலையில், இணையத்தை தொடர்ந்து திருப்பூர் பனியனிலும் ட்ரெண்டிங் ஆகிறது 'ப்ரே ஃபார் நேசமணி'. இளைஞர்களின் பனியன் ஆர்டர்கள் வரத்தொடங்கியுள்ளதாக உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். நேற்றிலிருந்து இணையத்தில் ட்ரண்டிங்காக வலம் வந்து கொண்டுள்ள 'ப்ரே ஃபார் நேசமணி' காமெடி பல விதங்களிலும் நெட்டிசன்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் தாக்கம் திருப்பூர் பனியன் தொழிலிலும் எதிரொலித்துள்ளது. திருப்பூரைச் சேர்ந்த விமல் என்ற பனியன் உற்பத்தியாளரும், நூதன் என்ற டிசைனரும் இணைந்து திருப்பூரில் வடிவேலுவின் 'ப்ரே ஃபார் நேசமணி' என டி-சர்ட்டுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சோதனை முயற்சியில் டி-சர்ட்டுகள் உற்பத்தி செய்த முதல் நாளே ஏராளமான ஆர்டர்கள் வரத்தொடங்கியுள்ளதாகவும், இணையம் மட்டுமல்லாமல் வர்த்தகத்திற்கும் 'ப்ரே ஃபார் நேசமணி' ஹேஷ்டேக் உதவியுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.