தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயானம் போல் காட்சியளிக்கும் அமராவதி அணை பூங்கா! - park

திருப்பூர்: பாழடைந்து கிடக்கும் அமராவதி அணை பூங்காவைப் பராமரிப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

park

By

Published : Mar 11, 2019, 11:56 PM IST

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அமராவதி அணை. இது 1957ஆம் ஆண்டு, முன்னாள் முதலமைச்சர் காமராஜரால் கட்டப்பட்டதாகும்.

இந்த அணையையொட்டி முதலைப் பண்ணையும், பூங்காவும் உள்ளன. அணைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முதலைப் பண்ணையை பார்த்து ரசித்துவிட்டு பூங்காவில் அமர்ந்து நேரம் கழிப்பது வழக்கம்.

ஆனால், தற்போது அமராவதி அணை பூங்கா சரியான பராமரிப்பு இல்லாததால், செடிகொடிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு மயானம்போல் காட்சியளிக்கிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் இவ்விடத்திற்கு வருவதை தவிர்த்து வருகின்றனர்.

பெருமைக்குரிய அமராவதி அணை அருகே உள்ள பூங்கா இந்த நிலைக்குத் தள்ளப்பட்டது வேதனையளிப்பதாகவும், பூங்காவைப் பராமரிப்பது குறித்து அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே சுற்றுலாப் பயணிகளின் வேண்டுகோளாக உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details