தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமியைக் கர்ப்பமாக்கிய இளைஞருக்கு போலீஸார் வலைவீச்சு! - orisa

திருப்பூர்: ஆசை வார்த்தை காட்டி 13 வயது சிறுமியைக் கர்ப்பமாக்கிய இளைஞரைக் காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Veerapandi Police Station

By

Published : Apr 2, 2019, 1:44 PM IST


பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் லட்சுமண் மண்டல். இவர் கடந்த மூன்று வருடங்களாக திருப்பூர் காங்கேயம் சாலையில் வசித்து வருகிறார். இவருக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார்.

இந்நிலையில், அந்தச் சிறுமி தனக்கு வயிறு வலிப்பதாக லட்சுமண்னிடம் கூற, அவரை அழைத்துக் கொண்டு மருத்துமனைக்கு சென்றார்.

அங்குச் சிறுமிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர் ஆறு மாதம் கர்ப்பமாக இருந்த அதிர்ச்சித் தகவல் கிடைத்தது. காரணம் குறித்து தன் மகளிடம் கேட்க, அதே பகுதியில் வசித்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 26 வயது அஜித் க்ரஷல் என்ற பனியன் தொழிலாளி, சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பல முறை ஆசைக்கு இணங்க வைத்துள்ளது தெரியவந்தது.

இது குறித்து சிறுமியின் தந்தை திருப்பூர் தெற்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அஜித் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ஒடிசா மாநிலத்திற்கு தப்பிச்சென்ற அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details