தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மோடி வருகை : கருப்புகொடி காட்டியவர்கள் கைது - கருப்புகொடி

திருப்புர்: பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி மதிமுக, மே 17 இயக்கம் உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் ”கோ பேக் மோடி” என முழக்கமிட்டனர்.

கோ பேக் மோடி

By

Published : Feb 10, 2019, 11:25 PM IST

இன்று பிரதமர் நரேந்திர மோடி திருப்பூர் வந்த நிலையில் அவரை எதிர்த்து மே 17 இயக்கம் உள்ளிட்ட கட்சிகள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தினர்

திருப்பூர் டவுன்ஹால் பகுதியில் இன்று மதியம் 2 மணி அளவில் மே பதினேழு இயக்கம் பெரியார் திராவிடர் கழகம் மற்றும் மதிமுக கட்சிகள் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டார் .

இந்நிலையில் போராட்டத்தின் போது கோ பேக் மோடி என்று கோஷம் எழுப்பிக் கொண்டே கையில் சில வாசகங்களை உயர்த்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருமுருகன் காந்தி, "தாமரை வீழும். தாமரை ஆதரவாக கூட்டணி செய்பவர்களை எதிர்ப்போம்", என்று கூறினார்.

இதையடுத்து திருமுருகன் காந்தி போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

கோ பேக் மோடி

ABOUT THE AUTHOR

...view details