தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் மீது பாய்ந்த போக்சோ - மகளிர் காவல்துறையினர் நடவடிக்கை.

திருப்பூர்: பூலுவப்பட்டி பகுதியில் 17 வயது சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்த பனியன் தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

pokso-act-on-a-young-man-abducted-a-girl-and-raped-her
pokso-act-on-a-young-man-abducted-a-girl-and-raped-her

By

Published : Feb 13, 2020, 2:22 PM IST

திருப்பூர் பூலுவபட்டியைச் சேர்ந்தவர் கலாதரன். இவர் அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார். அப்போது அதே நிறுவனத்தில் வேலை செய்த 17 வயது சிறுமியிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்தச் சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி வெளியூர் கடத்திச் சென்று, அவருக்குப் பாலியல் வன்புணர்வு செய்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் தனது மகளைக் காணவில்லை என்று அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட கலாதரன்

இவ்வழக்கை விசாரித்த காவல் துறையினர், கலாதரனைப் பிடித்து விசாரித்ததில் சிறுமியைக் கடத்திச்சென்று பாலியல் வன்புணர்வு செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவனிடமிருந்து சிறுமியை மீட்ட காவல் துறையினர், அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது!

ABOUT THE AUTHOR

...view details