திருப்பூர் மாவட்டம் தாராபுரம், இடையன்கிணறு பகுதிகளில் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்துவருகின்றனர். இந்தப் பகுதியில் மூன்று வருடங்களுக்கு முன், எஸ்.ஆர்.எஸ். என்ற நிறுவனமானது கோழித்தீவனம் அரைப்பதாக நிறுவனம் ஆரம்பித்திருந்தது. தற்போது இரண்டு வருடங்களாக கோழிக் கழிவுகளையும், மாட்டு இறைச்சி கழிவுகளையும் அரைத்து தீவனம் தயாரிப்பில் ஈடுபட்டுவருவதாகக் கூறப்படுகிறது.
ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுப்புகையால் நாசமாகும் சுற்றுச்சூழல்! குடியிருப்புவாசிகள் வேதனை - Meat slaughterhouse plant
திருப்பூர்: தாராபுரம், இடையன்கிணறு பகுதிகளில் இறைச்சிக் கழிவுகளை அரைக்கும் ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுப்புகையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
trippur
இதனிடையே இந்தக் கழிவுகளை இயந்திரத்தில் அரைக்கும்போது வெளியேறும் நச்சுப்புகையால், அப்பகுதி மக்களுக்கு தொடர்ச்சியாக மூச்சுத்திணறல், இருமல் போன்ற நோய்களால் பாதிக்கப்படுவதாகவும், இது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் முறையிட்டும், அலட்சியமாக இருந்து வந்ததால், பாதிக்கப்பட்ட மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதோடு, பொது மக்களுக்கு இடையூறாக உள்ள இறைச்சிக் கழிவுகளை அரைக்கும் நிறுவனத்தை அப்பகுதியிலிருந்து அகற்றக்கோரி மனு அளித்தனர்.