திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள பாப்பினி கிராமத்தில் ஒருவர் தென்னந்தோப்பில் வைத்து எரிசாராயம் காய்ச்சுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தாராபுரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளர் செல்வம் உள்ளிட்ட காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அங்கு, மணியன் என்பவர் தனது தென்னந்தோப்பில் வைத்து கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை கைதுசெய்த காவல் துறையினர், அவரிடமிருந்த 20 லிட்டர் எரிசாராயத்தையும் அழித்தனர்.
சாராய ஊரலை அழித்த காவல் துறை மேலும், அவரிடமிருந்து சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்திய பொருள்கள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: கள்ளச்சாராயம் காய்ச்சிய 16 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!