தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

திருப்பூர்: அடிப்படை வசதிகள் செய்து தர கோரி மாநகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

By

Published : Aug 7, 2019, 6:11 PM IST

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 50ஆவது வார்டு பட்டுகோட்டையார் நகர் பகுதியில், 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன.

இந்நிலையில், இப்பகுதி குழாயில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாக, வீடுகளுக்குள் சாக்கடை நீர் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதேபோல் வாரக்கணக்கில் குப்பைகளை அல்லாத காரணத்தால் குப்பைகள் மலைபோல் தேங்கி உள்ளதோடு நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், அடிப்படை வசதிகளை செய்துதர கோரி திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை பட்டுகோட்டையார் நகர் பகுதி மக்கள் முற்றுகையிட்டனர்.

மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பிரச்னைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து முற்றுகையிட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்

ABOUT THE AUTHOR

...view details