திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே சேலத்திலிருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த கேரள அரசு சொகுசுப் பேருந்தும், கேரளாவிலிருந்து சேலம் நோக்கி வந்துகொண்டிருந்த கண்டெய்னர் லாரியும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் பலத்த காயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு இரு மாநில ஆட்சியர்கள், உயர் அலுவலர்கள், அமைச்சர்கள் எனப் பலர் நேரில் சென்று ஆய்வு செய்துவருகின்றனர்.
இந்நிலையில் விபத்து நடைபெற்ற இடத்தை ஆய்வுசெய்த பாலக்காடு எம்பி. வி.கே. ஸ்ரீகந்தன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறுகையில், "இந்த விபத்தில் உயிரிழந்த 19 பேரின் உடல்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. அவர்களில் 15 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவர்களில் இதுவரை நான்கு பேரின் உறவினர்களிடம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது" என்றார்.