தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நேசமணிக்கான வழிபாடு; ஓராண்டை கடந்தது #PrayForNesamani - வடிவேலு மீம்ஸ்

சமூக வலைதளங்களில் ட்ரெண்டான #PrayForNesamani எனும் ஹேஷ்டாக் பதிவிடப்பட்டு ஓராண்டு ஆன நிலையில், தற்போது நெட்டிசன்களால் #PrayForNesamani1stAnniversary எனும் ஹேஷ்டாக் ஆனது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

#PrayForNesamani1stAnniversary
#PrayForNesamani1stAnniversary

By

Published : May 31, 2020, 7:04 PM IST

2019ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் தேதி சிவில் எஞ்சினியரிங் லேர்னர் எனும் முகநூல் பக்கத்தில், சுத்தியல் படம் பதிவிடப்பட்டு அதற்கு கீழே உங்கள் நாட்டில் இதற்கு என்ன பெயர் என்று கேட்கப்பட்டிருந்தது. அந்த பதிவிற்கு கீழே, சவுதியில் பணிபுரியும் விக்னேஷ் பிரபாகர் என்பவர் இது சுத்தியல் என்றும் இதனால் காண்ட்ராக்டர் நேசமணி அவரின் உறவினரால் தலையில் தாக்கப்பட்டு காயமடைந்தார் என்றும் தனது கருத்தை பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக #PrayForNesamani என அவர்கள் பதிவிட்டிருந்தனர். பின்னர் இந்த ஹேஷ்டாக் ஆனது கடந்த ஆண்டு மே 29, 30, 31 ஆகிய தினங்களில் இணையத்தில் ட்ரெண்டிங்காக வலம் வந்தது. நெட்டிசன்களால், வடிவேலுவின் மீம்ஸ் புகைப்படங்களுடன் பல விதங்களில் இந்த ஹேஷ்டாக் ஆனது சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டது.

ஓவர் நைட் ல ஒபாமா ஆன மொமன்ட்

இதனை தொடர்ந்து திருப்பூரை சேர்ந்த பனியன் உற்பத்தியாளர் விமல், டிசைனர் நூதன் ஆகியோர் இணைந்து நடிகர் வடிவேலுவின் தலையில் சுத்தியல் விழுவது போல் புகைப்படத்தை டி-சர்ட்டுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். சோதனை முயற்சியில் டி-சர்ட்டுகள் உற்பத்தி செய்த அவர்களுக்கு முதல் நாளே ஏராளமான ஆர்டர்கள் வந்தன.

ஓவர் நைட் ல ஒபாமா ஆன மொமன்ட்

அப்போது, #PrayForNesamani எனும் ஹேஷ்டாக் வர்த்தகத்திற்கும் உதவியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், இந்த ஹேஷ்டாக் பதிவிடப்பட்டு ஓராண்டு ஆன நிலையில் தற்போது சமூக வளைதளங்களில் #PrayForNesamani1stAnniversary எனும் ஹேஸ்டாக்கானது, ட்ரெண்டாகி வருகிறது.

இதையும் படிங்க: ஆட்டநாயகன் வார்னர் - 'கிரிக்கெட்டில் மட்டுமல்ல டிக்டாக்கிலும்'

ABOUT THE AUTHOR

...view details