புதிய ஆதார் அட்டை, ஆதார் அட்டை திருத்தும், ஆதார் எண்ணை நியாயவிலைக் கடை அட்டையுடன் இணைத்தல் ஆகியவற்றிக்கான சிறப்பு முகாம் திருப்பூர் உடுமலைப்பேட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
திருப்பூர் அருகே ஆதார் அட்டை சேவை சிறப்பு முகாம் - உடுமலை
திருப்பூர்: ஆதார் அட்டை சேவை சிறப்பு முகாம் நேற்று உடுமலைப்பேட்டையில் நடைபெற்றது.
ஆதார் அட்டை-சிறப்பு முகாம்
இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஆதார் அட்டை சேவைக்காக பொதுமக்கள் எந்த ஒரு சிரமமும் இன்றி காத்திருந்து பயனடைந்தனர்.