நாடு முழுவதும் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட்தேர்வு இன்று (செப். 13) நடைபெற்று வருகின்றன. இதில் முதன்முறையாக திருப்பூரிலும் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில், நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பள்ளியில் நீட் தேர்வு எழுதுவதற்காக மொத்தம் 90 வகுப்பறைகள் அமைக்கப்பட்டு, ஒரு அறைக்கு 12 நபர்கள் என மொத்தம் 1,080 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வுகள் இன்று மதியம் 2 மணிக்கு ஆரம்பித்து ஐந்து மணிக்கு முடிவடையவுள்ளது.