தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வட மாநிலத் தொழிலாளர்கள் வேலை தான் கேட்கிறார்கள்' - உடுமலை ராதாகிருஷ்ணன் - திருப்பூரில் 112 பேருக்கு கரோனா தொற்று

திருப்பூர்: வடமாநிலத் தொழிலாளர்கள் வேலை தான் கேட்கிறார்கள் சொந்த ஊருக்குச் செல்ல விரும்பவில்லை என கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

corona meeting
corona meeting

By

Published : Apr 30, 2020, 4:26 PM IST

கரோனா நோய்த்தடுப்பு ஆய்வுக் கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 112 பேருக்கு கரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் நேற்று வரை 91 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 10 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பவுள்ளனர். தடை செய்யப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து இயல்பான பகுதியாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஜம்மு - காஷ்மீர் முதல் கேரளா வரை திருப்பூரில் பிற மாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் வேலை தொடங்க வேண்டுமென கேட்டுள்ளார்கள். யாரும் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என கேட்கவில்லை. திருப்பூர் மாவட்டத்தில் தேவையான அளவுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று 120 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:கோவிட் 19 பெருந்தொற்றைப் பரப்பியது வௌவால்களா? - ஆய்வாளர்கள் விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details