திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே பெரியகோட்டை பகுதியில் இன்னர்வீல் கிளப் என்ற தனியார் சேவை அமைப்பு சார்பில் கிராமப்புற பள்ளிகளுக்கு இலவசமாக மடிக்கணினி, ஒலிப்பெருக்கி, தனியார் அறக்கட்டளையினருக்கு ஆம்புலன்ஸ் வாங்கிட ஐம்பதாயிரம் நிதி உதவி ஆகியவை வழங்கப்பட்டது.
இவ்விழாவை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும் அரசு கேபிள் டிவி நிறுவனத் தலைவருமான அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையேற்றுப் பொருட்கள், காசோலை ஆகியவற்றை வழங்கினார்.