மேஷம்: சமூகப் பொறுப்புகள் மற்றும் அலுவலக பணியின் காரணமாக உங்களுக்கு வேலை அதிகம் இருக்கும். இதிலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு உங்களுக்கான நேரத்தை செலவழிக்க வேண்டும். உங்களது உடல் நலத்தின் மீது கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. உங்கள் உடல் நலன் பாதிக்கப்பட்டால், அனைத்து பணிகளும் பாதிக்கப்படும்.
ரிஷபம்: உங்கள் நிர்வாகத்திறம் மற்றும் ஒருங்கிணைப்பு ஆற்றலை வெளிப்படுத்திக் காட்டுவதற்கான சிறப்பான நாள் இது. பணியிடத்திலோ அல்லது தொழிலோ களத்தில் இறங்கி முழுத் திறமையையும் வெளிப்படுத்துங்கள். நீங்கள் உங்கள் சகஊழியர்கள், மேலதிகாரிகள், பங்காளர்கள் மற்றும் போட்டியாளர்களிடம் உங்கள் மீதான நல் அபிப்ராயத்தை ஏற்படுத்தி, அவர்களின் அபிமானத்தையும் ஆதரவையும் பெறுவீர்கள். எதையும் அதிகமாகச் செய்யாதீர்கள். உங்களால் இயன்ற விஷயங்களைத் தாண்டிய விஷயங்களை செய்யாதீர்கள். அது உங்களுக்கே எதிராகத் திரும்பக்கூடும்.
மிதுனம்: அனைத்து விதமான கூட்டாண்மைகளிலும் ஈடுபடுவதற்கு அருமையான நாள் இது. உங்கள் நெருங்கிய நண்பர்களுடனான பந்தத்திற்கான நாள் இது. இணைந்து கணக்குத் துவங்குதல், ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளுதல். எதிர்கால நலனுக்குத் திட்டமிடல் ஆகியவற்றைச் செய்யலாம். நீங்கள் செய்யும் எதிலும் சிறப்பாகச் செயல்படுவீர்கள். மேற்கொண்டு படிப்பதற்கு ஆசைப்படும் உங்களில் சிலர், தெளிவான முடிவை எடுக்கக் கூடும்.
கடகம்: உங்களது தேவையை பூர்த்தி செய்து கொள்ள, பணத்தை பயன்படுத்திக் கொள்வீர்கள். நீங்கள் எதையேனும் மாற்ற விரும்பினால் அதையும் பணத்தை பயன்படுத்தி மாற்றுவீர்கள். உங்கள் பணம் வரவினால் உங்கள் அன்பிற்கு உரியவர்கள் பயனடைவார்கள். அனைத்து தரப்பிலிருந்தும் பணவரவு இருப்பதைப் போல, அனைத்து தரப்பிலிருந்தும் பண விரயமும் இருக்கும்.
சிம்மம்: சில வாக்குறுதிகள் காற்றில் பறந்து விடும். அவை அவை யாவும் நிறைவேறாது. அதேபோன்று இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, ஒரு விஷயத்தை சாதித்தது போல் தோன்றினாலும், அந்தப் பணி நிறைவேறாமல் இருக்கும். வெற்றி கை நழுவிப் போகும். எப்போதும் வெற்றி சாத்தியம் அல்ல என்பதை நினைவில் கொண்டு, ஏமாற்றம் அடையாமல் இருக்க வேண்டும். மாற்றம் ஏற்படும் என்று நம்பிக்கை வைக்க வேண்டும்.
கன்னி: உங்களது மனதில் பல்வேறு அறிவார்ந்த எண்ணங்கள் உதித்துக் கொண்டே இருக்கும். உங்களது அற்புதமான செயல் ஆற்றல் மூலம், அனைத்தையும் சரி செய்து விடுவீர்கள். மற்றவர்கள் மனதைப் படித்து, உங்கள் அன்புக்குரியவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள்.