தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஐஐடி பாத்திமா தற்கொலைக்கு நீதி வேண்டி மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்! - திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருப்பூர்: ஐஐடியில் தற்கொலை செய்து கொண்ட பாத்திமா லத்ததீப் என்ற மாணவியின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாத்திமா தற்கொலைக்கு நீதி வேண்டி மாதர் சங்கம் ஆர்பாட்டம்

By

Published : Nov 19, 2019, 7:41 PM IST

அனைத்திந்திய மாதர் சங்கம் இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சென்னை ஐஐடியில் தற்கொலை செய்துகொண்ட மாணவி பாத்திமா லத்தீப்க்கு உரிய நீதி கேட்டு திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்திந்திய மாதர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் மைதிலி தலைமை வகித்தார். செயலாளர் பவித்ரா தேவி, இந்திய மாணவர் சங்க சம்சீர் அகமது உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பாத்திமா தற்கொலைக்கு நீதி வேண்டி மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவிக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும், காவல் துறையினர் இந்த வழக்கில் பாரபட்சம் பார்க்காமல் செயல்பட்டு மாணவிக்கு நீதி பெற்றுத்தர வேண்டும்.

மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐஐடியில் அதிகரிக்கும் தற்கொலைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இது குறித்து மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர்.

இதையும் படிங்க: 'நீதி வேண்டும்... நீதி வேண்டும்... ஃபாத்திமாவுக்கு நீதி வேண்டும்!'

ABOUT THE AUTHOR

...view details