திருப்பூர்: மத்திய அரசின் வேளாண் சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி திருப்பூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மனிதநேய மக்கள் கட்சியினர் காவல் துறையினர் கைது செய்தனர்.
காவல் துறையினர் வைத்திருந்த தடைகளையும் மீறி உள்ளே செல்ல முயன்ற அவர்களை காவல் துறையினர் தடுத்ததால் திருப்பூர் டவுன்ஹால் மைதானம் அருகே உள்ள பாலத்தின் இரு சாலைகளை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மனிதநேய மக்கள் கட்சியனர் போராட்டம் முன்னதாக, மத்திய அரசின் வேளாண் சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து 18ஆவது நாளாக போராடி வருகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மத்திய அரசு உடனடியாக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வேளாண் சட்டத்திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என ஊர்வலமாக வந்த மனிதநேய மக்கள் கட்சியினர் ஏர் கலப்பை, மண்சட்டி உள்ளிட்ட விவசாயிகளின் உபகரணங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: ரிலையன்ஸ் நிறுவனத்தை முற்றுகையிட்ட விசிக, கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது!