திருப்பூர் மாவட்டத்தில் 2018ஆம் ஆண்டு சின்னான்டிபாளையம் பகுதியில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 10 வயது சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த சிவா என்பவர், விளையாட அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் திருப்பூர் தெற்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து, சிவாவை காவல் துறையினர் கைது செய்தனர். இதனிடையே, இந்த வழக்கின் விசாரணையானது திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளி சிவாவிற்கு போக்சோ சட்டத்தின்கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து சிவாவை காவல் துறையினர் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
அதேபோல், திருப்பூர் தாராபுரத்தில் 2017ஆம் ஆண்டு கோயில் திருவிழாவிற்கு வந்த 15 வயது இளம்பெண் இருசக்கர வாகனத்தில் வந்த தனது உறவினருடன் நின்று பேசிகொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த சேதுபதி, காளிமுத்து ஆகிய இருவர் அப்பெண்ணின் உறவிரை மிரட்டி, வாகனத்தை பறித்து அனுப்பிவிட்டு, அந்த வாகனத்தில் அப்பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்தனர்.
ந்த வழக்கும் நீதிபதி ஜெயந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இளம்பெண்ணை வன்புணர்வு செய்த குற்றத்திற்காக இருவருக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபாராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து, காவல் துறையினர் இருவரை கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர்.