தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா கவச உடை தயாரிக்கும் பணியில் பின்னலாடை நிறுவனங்கள்

திருப்பூர்: கரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் பிரத்யேக உடைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

covid
covid

By

Published : Apr 7, 2020, 1:09 PM IST

Updated : Jun 2, 2020, 10:29 PM IST

பின்னலாடை நகரமான திருப்பூரில் தற்போது கரோனா வைரஸ் தாக்குதலின் எதிரொலியாக, முகக்கவசங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதைத்தொடர்ந்து, கரோனா சிறப்பு வார்டுகளில் மருத்துவர்களும் செவிலியர்களுக்கும் பயன்படுத்தும் ’கோவிட் -19 பாடி மாஸ்க் கோட்’ எனப்படும் பிரத்யேகமான கவச உடைகள் தயாரிக்கப்பட்டுவருகின்றன.

முதல்கட்டமாக திருப்பூருக்கு 10,000 உடைகள் தயாரிக்க புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஆர்டர் தந்துள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பிரத்யேக அனுமதி பெற்று, உடையாக தயாரிக்கும் பணியில் திருப்பூரைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து லோகநாதன் கூறுகையில், ”கடந்த 3 நாட்களாக உடை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளேன் தற்போது மருத்துவ உலகுக்கு இந்த உடைகள் தேவைப்படுவதால், 10,000 உடைகள் கேட்டுள்ளனர். வழக்கமான ஆடை தயாரிப்பு போன்றுதான் இந்த பணியும். ஆனால் வழங்கப்பட்டிருக்கும் ’நான் ஓவன் மெட்டீரியல்’, இயந்திரத்தில் வெட்டும்போது எளிதில் சூடாகிவிடும். இதனால் அவை எளிதில் ஒட்டிக்கொள்ளும்.

கரோனா கவச உடை தயாரிக்கும் பணியில் பின்னலாடை நிறுவனங்கள்

இயந்திரத்தில் வெட்டும்போது மிகுந்த கவனத்துடன் வெட்ட வேண்டியுள்ளது. தைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள், தைக்கும் வளாகம் என அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறது.

இதற்காக நாள்தோறும் 50 தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். நாள் ஒன்றுக்கு ஆயிரம் உடைகள் தைத்துக் கொண்டிருக்கிறோம். 10 நாட்களில் இந்த ஆர்டரை முடித்துவிடுவோம்” என்றார்.

Last Updated : Jun 2, 2020, 10:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details