திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த சிவலிங்கம் பிள்ளை லே-அவுட் பகுதியில் வசித்துவருபவர் தாமோதரன். ஆடிப்பெருக்கை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு முன் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கொழுமம் பகுதியில் உள்ள தனது மற்றொரு வீட்டிற்குச் சென்றுள்ளார்.
உடுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள் திருட்டு! - திருப்பூர்
திருப்பூர்: உடுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றனர்.
திருப்பூர்
பின்பு அங்கிருந்து நேற்று மதியம் உடுமலை வீட்டிற்கு வந்த தாமோதரன், வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபொழுது பீரோவிலிருந்த 15 பவுன் நகைகள், 23 ஆயிரம் ரூபாய் திருடுபோனது தெரியவந்தது.
இது குறித்து அவர் உடுமலை காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். பின் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்ட காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.