தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தொழில் முதலீடு; முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்தத் தயார்' - ஸ்டாலின் - OPS

திருப்பூர்: முதலமைச்சர் கூறியது போல, அனைத்து தொழில் முதலீடுகளையும் தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்துவிட்டால், திமுக சார்பில் முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்தத் தயார் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

stalin

By

Published : Sep 5, 2019, 1:58 PM IST

திமுக முன்னாள் அமைச்சர் சாமிநாதன் இல்ல திருமண விழா திருப்பூர் அடுத்த நாச்சிபாளையத்தில் நடைபெற்றது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், எம்பி டி.ஆர். பாலு, முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ. வேலு , கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன், பாஜக மூத்தத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று பேசினர்.

அப்போது பேசிய சி.பி. ராதாகிருஷ்ணன், கருணாநிதிக்குப் பிறகு, எங்கள் அனைவரையும் வீழ்த்தி வெற்றிபெற்ற 'தளபதியாக' ஸ்டாலின் இருக்கிறார் என்றும் ஸ்டாலினின் உழைப்பு, தங்களை இன்னும் உழைக்க வேண்டும் என உணர்த்தியுள்ளதாகவும் உணர்ச்சி ததும்பப் பேசினார்.

முன்னாள் அமைச்சர் சாமிநாதன் இல்ல திருமண விழாவில் ஸ்டாலின் பேச்சு

இதையடுத்து பேசிய ஸ்டாலின், 1967ஆம் ஆண்டு திமுக அரியணை ஏறிய பிறகுதான் சீர்திருத்த திருமணங்களுக்கு சட்ட வடிவம் கொடுக்கப்பட்டது என்றும் 'பொறுத்தார் பூமி ஆள்வார்', நாம் இப்போது பொறுத்துக்கொண்டிருக்கிறோம் என்றும் கூறினார். சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதற்கு பதிலளித்து பேசிய ஸ்டாலின், உங்களை வீழ்த்தவில்லை, தோற்கடித்து உள்ளோம் என்றும் அதுவும் தாங்கள் தோற்கடிக்கவில்லை, மக்கள்தான் தோற்கடித்துள்ளார்கள் என்றார்.

இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாக முதலீடுகளை முதலமைச்சர் பெற்றுள்ளதாக செய்திகள் வந்ததை அறிந்ததாகவும், முதலமைச்சர் கூறியது போல அனைத்துத் தொழில் முதலீடுகளையும் தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்துவிட்டால், திமுக சார்பில் முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்தத் தயார் என்றும் சூளுரைத்தார்.

மக்களவைத் தேர்தலில் திமுகவிற்கு மக்கள் தந்த வெற்றி, சட்டப்பேரவைத் தேர்தலிலும் தந்தால்தான் தமிழ்நாட்டு மக்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

ABOUT THE AUTHOR

...view details