கடந்த ஆண்டு பருவ மழை பெய்யாமல் ஏமாற்றியதால், அனைத்து பகுதிகளிலும் அணையின் நீர்மட்டம் சரிந்து காணப்பட்டது. அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணைக்கு நான்கு மாதமாக நீர்வரத்து இல்லாமல் அணை வறண்டு காணப்பட்டது. இந்தாண்டு, குளிர்கால மழை, கோடை மழை ஏமாற்றியதால், அணையின் நீர்மட்டம் மொத்தமுள்ள 90 அடியில் 25 அடியாக குறைந்தது.
அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - மக்கள் மகிழ்ச்சி!
திருப்பூர்: உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஒரு வாரத்தில், மூன்று அடி அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
AMARAVATHI
இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், தென் மேற்குப் பருவ மழை தொடங்கி, தீவிரமடைந்து வருகிறது. இதனால், அணைக்கு நீர்வரத்தும் அதிகரித்து, கடந்த வாரத்தில், 28 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் தற்போது மூன்று அடி உயர்ந்து, 31 அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.