திருப்பூர் மாவட்டம் கொடிக்கம்பம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனைசெய்யப்படுவதாகக் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், அப்பகுதியில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, நாகேந்திரன் என்பவர் வீட்டிற்குள் மதுவை மறைத்துவைத்து வீட்டின் பின்புறமாக விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, காவல் துறையினர் அவரிடமிருந்த 277 மதுபாட்டில்களைப் பறிமுதல்செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், பெருமாநல்லூர் சாலை சாந்தி திரையரங்கு அருகே அமைந்துள்ள மதுபான கடையில் பணிபுரியும் இரண்டு ஊழியர்கள் மதுபாட்டில்கள் கொடுத்ததும், ரூ. 120 மதிப்புடைய மதுபாட்டில்களை ரூ. 500-க்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.
கைதுசெய்யப்பட்ட இளைஞர் கைது இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் நாகேந்திரனைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மதுபான கடை ஊழியர்கள் இருவரைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க:மது விற்பனை செய்த ஒருவர் கைது: 388 மது பாட்டில்கள் கைது!