திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் பகுதியிலுள்ள விவசாய நிலங்களில் சிறுத்தையை பார்த்ததாக பொதுமக்கள் வனத்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.
விவசாய நிலத்தில் புகுந்த சிறுத்தை: தீவிர கண்காணிப்பில் வனத்துறை! - விவசாய நிலத்தில் புகுந்த சிறுத்தை
திருப்பூர்: ஆண்டியகவுண்டனூர் பகுதியில் சிறுத்தை நடமாடுவதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத் துறையினர் அப்பகுதியிலுள்ள சோளக்காட்டில் வனவிலங்கு கால்தடயங்களை ஆய்வு செய்தனர். மேலும், வனப்பகுதியில் வனவிலங்கு கண்காணிக்கும் கேமராக்களை ஆங்காங்கே பொருத்தியும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
விவசாய நிலங்களில் இருப்பது சிறுத்தைதானா அல்லது வேறு வனவிலங்கா என்பது குறித்தும் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். விவசாய பகுதிகளில் சிறுத்தை நடமாட்டத்தை ஒரு சில பொதுமக்கள் பார்த்துள்ளதால் அப்பகுதியில் தொடர்ந்து அச்சம் நிலவி வருகிறது.