திருப்பூர்:காங்கேயம் அருகே உள்ள வாலிபனங்காடு பகுதியில் சரக்கு வேன் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சரக்கு வேன் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் மூன்று பெண்கள் உள்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
திருப்பூரில் நேருக்கு நேர் லாரி மோதி 5 பேர் உயிரிழப்பு - குற்றச் செய்திகள்
திருப்பூரில் லாரி மோதிய விபத்தில் சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பும்போது இந்த விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மாஸ்டர் பட பாணியில் சிறுவர்கள் மூலம் போதைப்பொருள் கடத்தும் கும்பல்